பட்டத்திருவிழாவை அரசியல் ஆக்காதீர்கள்-வினோத்

கெளரவ விளையாட்டுத்துறை அமைச்சர் திட்டமிடாத ஒரு நிகழ்வுக்கு வருவாதாக கூறுவது அரசியல் நாகரிகமற்ற செயல் ஆகும் இவ்வாறு கூறுகிறார் அரசியல் ஆர்வலர் வினோத் பாலசந்திரன்.

மேலும் அவர் கூறியதாவது…..

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை பற்றி அறிந்துகொண்ட நாமல் ராஜபக்ச அவர்கள் அதற்கான ஒரு அங்கிகாரத்தை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதுடன் sports tourism-த்தை வடக்கில் உருவாக்கி கொடுத்தால் யாழிற்கான வருவாய் அதிகரிக்கும் என்ற நோக்கத்துடனும் விளையாட்டத்துறை அமைச்சர் என்ற ரீதியில் அக் குழுவுடன் கலந்துரையாட தீர்மானித்தார்.

பட்டத்திருவிழா தொடர்பாக காணப்படும் இடர்பாடுகளை கேட்டறிவதுடன் பட்டத்திருவிழாவிற்கான விளம்பரத்தை உருவாக்குவது தொடர்பாக ஆராய்வதற்கும் அக் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன..

ஆனால் சில வடக்கு பிரதிநிதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், நாமல் சிறப்பு விருந்தினராக வருவதா ? என அரசியல் செய்து வருகின்றனர்.. பட்டத்திருவிழாவிற்கு நாமல் வருவதாக திட்டமிடாத சந்தர்பத்தில், “அவர் வருவதாக எண்ணி” அரசியல் செய்யும் இவர்களை என்னவென்று கூறுவது ??மக்களை பிழையான வழி கடந்த முற்படுவதேயாகும். எமது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!