கார்த்திகை விளக்கீடு தொடர்பாக இலங்கை இந்து ஒன்றியத்தின்” கண்டன அறிக்கை

கார்த்திகை விளக்கீடு தொடர்பாக பொலிஸ் பிரிவினர் கொண்டுள்ள அதிர்ப்த்தி, சந்தேகம் தொடர்பாக; “இலங்கை இந்து ஒன்றியத்தின்” தனது கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்கின்றது.

இலங்கை நாட்டின் காவல் துறையானது தனித்துவமான ஒரு திணைக்களமாக இருக்கின்றது. ஆனாலும் இலங்கைவாழ் மக்களின் விசேட தினங்களை கூட இத் திணைக்களங்கள் இதுவரையில் அறிந்திராமல் இருப்பது துரதிஷ்டாவசமானதாகும். நாட்டு மக்கள் தொடர்பாக பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்கள் அறியாமல் இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களுக்கான தெளிவை வழங்கவேண்டிய எமது பொறுப்பையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

எதிர்வரும் காலங்களின் இந்த நாட்டு பிரஜைகளின் அனைத்து விடயங்களையும் அரச திணைக்களங்கள் முழுமையாக அறிந்துகொண்டுள்ள ஒரு நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம். எம்முடைய பொறுப்பை நாம் சரியாக முன்னெடுக்கின்ற பொழுது, அனைத்தும் சரியாக நடக்கும் என்பதை நாம் ஆணித்தனமாக நம்புகிறோம். அத்துடன் நாம் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதையும் ஒவ்வொரு விடயத்திலும் ஆணித்தனமாக பதிவு செய்கின்றோம்.

அரசியல் சுயநலன்களுக்கு அப்பால் எம் சமூகத்தின் இன்னல்களுக்கான தீர்வை காண்பது மட்டுமே எம்முடைய செயல்பாடாக இருக்கவேண்டும் என்பதை மையப்படுத்தியே எம்முடைய செயல்பாடுகளை தீர்மானிக்கின்றோம். குறித்த விடயத்திலும் எம்முடைய செயல்பாடு அத்தகையதாகவே அமையும். இனிவரும் காலங்களில் எங்களுடைய சடங்குகள் தொடர்பான தெளிவினை இந்நாட்டின் அனைத்து மக்களும், திணைக்களமும் அறிந்திருக்கும் வண்ணம் எங்களுடைய செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நன்றி
இலங்கை இந்து ஒன்றியம்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!