குறைந்த வருமானம் பெறும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு!
பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்கள் மாளிகாவத்தை கால்டன் முன்பள்ளியில் வைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு நேற்று (26) தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.
“லிய சரணி” வேலைத்திட்டத்தின் கீழ் இந்நற்பணி மேற்கொள்ளப்பட்டது. தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்ட பெண்களை சுய தொழிலில் ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
“லிய சரணி” வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.
வாழ்வாதாரத்தை இழந்த பெண்களுக்கு ஆதரவளிப்பதற்காக இவ்வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
#jaffnanews