அரசுடமையாக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் சீனி!களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரத்து 900 மெற்றிக் டன் சீனியை, அரச மற்றும் தனியார் நிறுவனங்களினூடாக நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் என்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்…
‘களஞ்சியசாலைக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 29 ஆயிரத்த 900 மெட்ரிக்தொன்சீனி, நேற்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சீனித்தொகை, கட்டுப்பாட்டு விலையில், அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல், 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அன்றைய நாளில், நாட்டுக்குள் 88 ஆயிரத்து 878 மெட்ரிக்தொன் சீனிகாணப்பட்டது.
2020 ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதிவரை, 584 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என, நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டின் மாதாந்தச் சீனித்தேவையின் அளவு 35 ஆயிரம் மெட்ரிக்தொன் ஆகும்.
இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டுக்குள் சீனிக்குத்தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி, நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி, அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று, கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.

பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின்னை 2ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், 2021-08-30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்பிரகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் ஒருவரை நியமித்து, சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப்பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கவும், ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சீனியைக் கண்டுபிடிப்பதற்காக முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் சீனித்தொகையை, கட்டுப்பாட்டுவிலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

14 thoughts on “அரசுடமையாக்கப்பட்ட 29 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் சீனி!

  1. Pingback: 20 mg cialis
  2. Pingback: viagra pill
  3. Pingback: cialis ebay
  4. Pingback: cialis 20mg daily

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!