வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும்
-இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்-


வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும்
-இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்-

வடக்கு கடலில் தொடர்ந்தும் பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டுமெனவும் நேற்றைய இந்திய மீனவர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் இந்திய மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பேருந்துகளை கடலுக்குள் போடும் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மீனவர்கள் சார்பிலும் யாழ் மாவட்ட மீனவர்கள் சார்பிலும் குறிப்பிட்ட சில இந்திய மீனவர்களின் போராட்டத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்\

இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீன் வளத்தையும் அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு கட்ட ஆய்வுகளை நீண்டகால முயற்சிகளையும் மீனவ அமைப்புகளின் கோரிக்கையையும் ஏற்று பல செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை கடல் எல்லைக்குள் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கோடு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருகோணமலை கடற்பிரதேசத்திலும்; தற்போது யாழ். மாவட்ட காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவை அண்மித்த பகுதியில் பேருந்துகளை கடலில் போட்டுள்ளனர். இதனை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கை கடல் எல்லைக்குள், இலங்கை மீனவர்களுக்கு குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எங்களுடைய கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் வளத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடு கடலுக்குள் போடப்படும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் எடுத்த நடவடிக்கையை மாவட்ட மீனவ சமூகமும் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களும் வரவேற்று நிற்கின்றோம்.
ஆனால் இந்திய மீனவர்களென குறிப்பிட்டு சில மீனவர்கள் இந்த போராட்டத்தை செய்கின்றார்கள்.

பெரும்பகுதியான இந்திய மீனவர்கள் நேற்று நடந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று எங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டின் கடலோரப் பிரதேசங்களில் இது போன்ற பழைய இரும்புகள் கடலுக்குள் போடப்பட்டு இயற்கையான பவளப்பாறை ஒத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அறியாதவர்கள் போன்று இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் யுத்தத்திற்கு பின்பு எமது கடல் வளத்தை இந்திய இழுவைப்படகுகள் பவளப்பாறைகளையும் கடல் வளங்களையும் அழிக்கும் இந்த செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் கண்டித்து நிறுத்த வேண்டும்

எமது கோரிக்கையை ஏற்று கடலில் தொடர்ந்தும் பேரூந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டும்.

குறிப்பாக யாழ் மாவட்ட கடற்தொழில் வளத்தை பாதுகாக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு மீனவ சமூகம் பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!